கேஜிஎஃப் புகழ் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘டாக்சிக்’. மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, டாரா சுதாரியா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா மற்றும் தனிஷ்க் பாக்ஷி ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
கேவிஎன் புரடக்ஷன் தயாரித்துள்ள இப்படம் கடந்த மார்ச் 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தார். பின்னர் ரிலீஸ் ஜூன் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பதற்றம் காரணமாக மீண்டும் பட ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் கீது மோகன்தாஸின் பிறந்த நாளையொட்டி டாக்சிக் படத்தின் BTS வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.




