பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிரடியான 6 ஃபைபர் பிளான்கள்! முழு விவரங்கள்

மே மாதத்திற்கான ஆறு ஃபைபர் பிளான்களை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. கடந்த வருடம் ஆக்டோபர் மாதம் பிஎஸ்என்எல் நிறுவனம் ‘பாரத் ஃபைபர்’ என்ற பிராட்பேண்ட் பிளான்களை அறிமுகப்படுத்தியது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் ஃபைபர்…

மே மாதத்திற்கான ஆறு ஃபைபர் பிளான்களை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

கடந்த வருடம் ஆக்டோபர் மாதம் பிஎஸ்என்எல் நிறுவனம் ‘பாரத் ஃபைபர்’ என்ற பிராட்பேண்ட் பிளான்களை அறிமுகப்படுத்தியது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் ஃபைபர் பிராட்பேண்ட் பிளான்களுக்கு போட்டியாக இதை பிஎஸ்என்எல் அறிவித்தது. இந்நிலையில் இந்த ஆண்டு மே மாதம் ‘பாரத் ஃபைபர்’ பிளான்களின் முக்கியமான 6 பிளான்களை பற்றி கிழே காணலாம். இந்த பிளான்கள் மூலம் ஏராளமான டேட்டாக்கள், இத்துடன் ஓடிடி சலுகைகளும் வழங்கப்படுகிறது.

‘ஃபைபர் பேசிக்’ ( Fibre Basic) பிளான் மூலம் ரீசார்ச் செய்யும்போது, 30 எம்பிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட் கிடைக்கும். மேலும் இதில் 3.3 டீபி டேட்டாவும், இலவச வாய்ஸ் கால்களும் கிடைக்கும். இந்த பிளானின் காலவரையறை ஒரு மாதம், விலை ரூ 449 ஆகும். ‘ஃபைபர் பேசிக் பிளஸ்’ (Fibre Basic Plus) பிளான் மூலம் ரீசார்ச் செய்தால் 60 எம்பிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட் கிடைக்கும். மேலும் இதில் 3.3 டீபி டேட்டாவும், இலவச வாய்ஸ் கால்களும் கிடைக்கும். இந்த பிளானின் காலவரையறை ஒரு மாதம், விலை ரூ 599 ஆகும்.

‘ஃபைபர் வேல்யூ’ ( Fibre Value) பிளான் மூலம் ரீசார்ச் செய்யும்போது, 100 எம்பிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட் கிடைக்கும். மேலும் இதில் 3.3 டிபி டேட்டாவும், இலவச வாய்ஸ் கால்களும் கிடைக்கும். இந்த பிளானின் காலவரையறை ஒரு மாதம், விலை ரூ. 599 ஆகும். ‘ஃபைபர் ப்ரீமியம்’ பிளான் மூலம் ரீசார்ச் செய்யும்போது 200 எம்பிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட் கிடைக்கும். இதில் 3.3 டீபி டேட்டாவும், இலவச வாய்ஸ் கால்கள், டிஸ்னி மற்றும் ஹாட் ஸ்டார் ப்ரீமியம் ஒரு வருட சலுகை கிடைக்கும்.

இதுபோல் 200 எம்பிபிஎஸ் இன்டர்நெட் வேகம் கொண்ட ‘ஃபைபர் ப்ரீமியம் பிளஸ்’ பிளான் மூலம் ரீசார்ஜ் செய்யும்போது 3.3 டீபி டேட்டா சேவை மட்டுமே வழங்கப்படுகிறது. ‘ஃபைபர் அல்ட்ரா’ (Fibre Ultra) பிளான் மூலம் ரீசார்ஜ் செய்தால் 300 எம்பிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட் கிடைக்கும். மேலும் 3.3 டீபி டேட்டாவும், இலவச வாய்ஸ் கால்கள், டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் ப்ரீமியம் ஒரு வருட சலுகை கிடைக்கும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.