பிரேசிலில் கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கிய பிறகு 4-வது முறையாக சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றப்பட்டுள்ளார்.
சீனாவிலிருந்து கடந்த 2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இன்னும் வைரஸுக்கு எதிரான போரில் அனைத்து நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. பல நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருகிறது.
பிரேசிலில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் தொடர்பாக அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனேரோ தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தொற்று பரவ தொடங்கியது முதல் அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் 4வது முறையாக மாற்றப்பட்டுள்ளார். தற்போது மார்செலோ குவரோக என்பவரை அதிபர் ஜெயிர் போல்சனேரோ.சுகாதாரத்துறை அமைச்சராக நியமித்துள்ளார்.







