புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலின் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற விநாயகர் இந்திர விமான திருவீதி உலாவை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலின் 63-ஆம்
ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 21-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரம்மோற்சவத்தையொட்டி நாள்தோறும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று
வருகிறது மேலும் பல்வேறு வாகனங்களிலும் வீதி உலாவும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக இந்திர விமான வீதி உலா
நடைபெற்றது. புதிய பட்டாடை உடுத்தி பல்வேறு வண்ண ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் ஆலய உட்பிரகாரத்தில் உலா வந்ததை தொடர்ந்து இந்திர விமானத்தில் வைக்கப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வீதி உலாவில நடைபெற்றது, வீதி உலா நேரு வீதியில் வந்தபோது முதல்வர் ரங்கசாமி, விஜய் மக்கள் இயக்கதின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.







