அதிமுக தலைமை ஏற்க இருவருக்கும் தகுதி இல்லை-கே.சி.பழனிசாமி

அதிமுக தலைமை ஏற்க இருவருக்கும் தகுதி இல்லை என்று அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி தெரிவித்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மண்டபத்தில்…

அதிமுக தலைமை ஏற்க இருவருக்கும் தகுதி இல்லை என்று அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுக தலைமை ஏற்க இருவருக்கும் தகுதி இல்லை. இருவரும் திமுகவுடன் மறைமுக ஒப்பந்தம் வைத்துள்ளனர். பாஜக ஆசிர்வாதத்திற்கு ஏங்கி துடிக்கிறார்கள். திமுகவிற்கு பொரும் தொகையை வழங்கியதால், வேலுமணி மற்றும் தங்கமணி மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக பலர் கூறுகிறார்கள்.

பொன்னையன் பேசியது தான் உண்மையான அதிமுக தொண்டணின் எண்ணம்.
பிரதமர் யாரை பார்த்தார் என்பது தான் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர்கள் இடையே போட்டியாக உள்ளது. இன்னொரு ராமதாஸ் ஆக இவர்கள் முயற்சிக்கிறார்கள். எம்ஜிஆராக அல்ல.

வெளிப்படையாக சாதிய அரசியலை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் செய்கிறார்கள். ஆனால், சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்டது அதிமுக. மறைமுகமாக இபிஎஸ் தன்னை
ஏற்றுக் கொள்பவர்களுக்கு மட்டும் உறுப்பினர் அட்டையை வழங்குகிறார்.

அப்படி இல்லாமல், உறுப்பினர் அட்டையை புதுப்பித்து அனைத்து தொண்டர்களுக்கும் உறுப்பினர் அட்டையை வழங்க வேண்டும். அதன் பின் பொதுவான நபரை வைத்து ஒற்றை தலைமைக்கான தேர்தலை நடத்த வேண்டும்.

குண்டர்களை வைத்து ஒருங்கிணைப்பாளர் தேர்தலை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நடத்தினார்கள். தொண்டர்களை அனுமதிக்கவில்லை. ஒற்றைத் தலைமை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது வரவேற்கதக்கது.

தொண்டர்கள் அமைத்த தலைமையை எதிர்த்து தர்ம யுத்தம் நடத்திய அன்றே ஓபிஎஸ் விழுந்துவிட்டார் என்றார் கே.சி.பழனிசாமி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.