முக்கியச் செய்திகள் விளையாட்டு

அரை சதம் விளாசிய கில்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 49-வது லீக் ஆட்டத்தில் மோர்கன் தலைமை யிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், சஹா களமிறங்கினர். சஹா டக்-அவுட் ஆக, ஜேசன் ராய் 10 ரன்களுக்கு அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். ஐதராபாத் அணி 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் 26 ரன்கள் எடுத்திருந்தபோது, ஷகிப் அல் ஹசனால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால், முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து வந்த வீரர்களும் நிலைத்து நிற்காததால், 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில் டிம் சவுதி, வருண் சக்கரவர்த்தி, ஷிவம் மாவி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி . அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான சுப்மன் கில் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். வெங்கடேஷ் ஐயர் 8 ரன்களிலும் திரிபாதி 7 ரன்களிலும், நிதீஷ் ராணா 25 ரன்களிலும் வெளியேறினர். கில், 57 ரன்களில் ஆட்டமிழந் தார்.

பின்னர், 19.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 119 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் மோர்கன் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

Advertisement:
SHARE

Related posts

ஜெயலலிதா பிறந்த நாளன்று அவர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை : அமைச்சர் அறிவிப்பு

Halley Karthik

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Arivazhagan CM

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா உறுதி

Gayathri Venkatesan