இட நெருக்கடி காரணமாகவே புத்தக திருவிழாவில், நீலம் பதிப்பகத்திற்கு கடைகள் மறுக்கப்பட்டதாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் குற்றச்சாட்டுக்கு பபாசி பதிலளித்துள்ளது.
சென்னையில் ஜனவரி மாதம் புத்தகக் கண்காட்சி வழக்கமாக நடைப்பெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான புத்தக கண்காட்சியும் YMCA மைதானைத்தில் 6 முதல் 23 வரை நடத்த திட்டமிடப்பட்டது. இதனையடுத்து, கொரோனா பரவல் காரணமாக இந்த புத்தக கண்காட்சி தேதி அறிவிக்கப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், திரையரங்குகள், பொது கூட்டங்கள், வார இறுதி ஊரடங்குகள் ஆகியவற்றுக்கு தடைகள் நீக்கப்பட்டன. அதன் வரிசையில் புத்தன கண்காட்சி நடத்த இருந்த தடையையும் நீக்கி வரும் 16ம் தேதி முதல் மார்ச் மாதம் 6ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்நிலையில், 45வது புத்தக திருவிழா, சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இதில், நீலம் பதிப்பகத்திற்கு கடைகள் மறுக்கப்பட்டதாக இயக்குனர் பா.ரஞ்சித்தின் குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார். அதுதொடர்பாக பபாசி சங்கத்தினர் சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புத்தக திருவிழா நடைபெறும் எனவும், வாசகர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.
YMCA மைதானத்தில் நாளை மறுநாள் (16.02.2022) துவங்கவிருக்கும் புத்தகச் சந்தையில் நீலம் பதிப்பகத்தின் அரங்கு எண் 18,19.
வாசகர்கள் அனைவரையும் அன்புடன் எதிர்நோக்குகிறோம். pic.twitter.com/f0Hn1VgGL4
— Neelam Publications (@NeelamPublicat1) February 14, 2022
அப்போது, நீலம் பதிப்பகத்திற்கு, புத்தக திருவிழாவில் ஸ்டால்கள் வழங்குவதில் தொடர்ச்சியாக சிக்கல் இருப்பதாக, இயக்குனர், பா.ரஞ்சித் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, இட நெருக்கடி காரணமாகவே நீலம் பதிப்பத்தற்கு ஸ்டால் கொடுக்காமல் இருந்ததாகவும், அதற்குப் பிறகு 2 ஸ்டால்கள் ஒதுக்கப்பட்டதாகவும் விளக்கமளித்தனர்.