டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லியில், கடந்த சில நாட்களாகவே இ-மெயில் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்…

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில், கடந்த சில நாட்களாகவே இ-மெயில் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் இந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானவை என காவல்துறை தெரிவித்தனர். இதனிடையே டெல்லியில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட  மருத்துவமனைகளுக்கு இன்று (மே 12) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இந்த தகவலையடுத்து தீயணைப்புத் துறையினர், மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் மிரட்டல் விடுக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு விரைந்தனர். மருத்துவமனைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்ட இவர்கள், சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டுபிடிக்கபடவில்லை என தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து இன்று (மே 12) மாலை 6.15 மணியளவில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி முழுவதும் பரபரப்பு நிலவியுள்ளது. சமீபகாலமாகவே டெல்லி மற்றும் அகமதாபாத்தில் இதுபோன்ற மிரட்டல்கள் அதிகமாகி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு குறைந்தபட்சமாக 130 பள்ளிகளுக்கு இதுபோன்ற மிரட்டல்கள் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.