#RCBvsDC – டெல்லி அணிக்கு 188 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.  2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில்…

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. 

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. 61 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் எந்த நான்கு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் என தீவிரமாக சென்றுகொண்டிருக்கிறது போட்டி. இந்நிலையில் இன்று 62 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில்  களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. இதன்மூலம் டெல்லி அணிக்கு 188 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இதில் அதிகபட்சமாக ரஜத் பண்டிதர் 52 ரன்கள் எடுத்தார். வில் ஜாக்ஸ் 41 ரன்கள் எடுத்தார். டெல்லி சார்பில் கலீல் அஹ்மத், ராசிக் சலாம் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகேஷ் குமார், குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

கடந்த நான்கு போட்டிகளிலும் பெங்களூரு தனது வெற்றியை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. இந்த போட்டியிலும் தனது வெற்றியை பதிவு செய்யுமா என பொருத்திருந்து பார்க்க வேண்டும். பெங்களூரு அணி விளையாடி உள்ள 12 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்றும், சென்னை அணியுடனான போட்டியிலும் பெங்களுரு வெற்றிப் பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது குறிப்பிடதக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.