கேரள மார்க்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தாக்குதல்!

கேரளாவில் மார்க்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் முதமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில்…

கேரளாவில் மார்க்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் முதமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது. திருவனந்தபுரத்தில் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

https://twitter.com/ANI/status/1542592734938411008

இதைதொடர்ந்து கேரள மாநில காவல் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவில் ஆளும் கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்தில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.