சித்தார்த்-கியாரா திருமணம் குறித்து பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகியின் ட்வீட்டிற்கு நெட்டிசன்கள் சுவாரசியமான கருத்து தெரிவித்து இணையத்தை கலக்கி வருகின்றனர்.
நீண்ட நாட்களாக காதலித்த பாலிவுட் பிரபலங்களான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியரா அத்வானி இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக ஒரு வதந்தி முன்பு பரவியது. இந்நிலையில், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவான ஷெர்சா படத்தில் நடித்தபோது, இருவரிடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து சித்தார்த் மற்றும் கியாரா அத்வானி ஆகியோரின் திருமணம் ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள சூர்யாகர் அரண்மனையில் பிரமாண்டமான முறையில் நேற்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், திரைபிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என பலரும் பங்கேற்றனர்.
https://twitter.com/Swiggy/status/1622957114074480641
சித், கியாரா திருமணத்தையடுத்து உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் சுவாரசியமான ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளது. அந்த ட்வீட்டில், சித்-கியாரா திருமணத்தில் நீங்கள் கலந்து கொண்டு அங்கு வழங்கப்பட்ட உணவைப் பற்றி பதில் சொன்னால் என்ன சொல்வீர்கள் என்பதை கமெண்டில் பதிவிடுமாறு நகைச்சுவையான முறையில் தெரிவித்திருந்தது. இதையடுத்து இணையவாசிகள் பலரும் உணவு வகைகளை பற்றி கமெண்ட் செய்து இணையத்தை தெறிக்கவிட்டனர்.







