ஓடிடியில் வெளியானது ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம்!

‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் வெளியான திரைப்படம்…

‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ப்ளூ ஸ்டார்’.
இத்திரைப்படத்தில் பிரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, இளங்கோ குமாரவேல், பகவதி பெருமாள், அருண் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்தை லெமன் லீப் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.  கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ஜன.25-ம் தேதி வெளியானது.  இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.  இந்த நிலையில்,   இத்திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.