ஆசிய அளவில் சாதனை படைத்த 8 வயது சிறுமி!

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் ஆசிய அளவில் சாதனை படைத்து அசத்தியுள்ளார்.  ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியை சேர்ந்தவர் அர்ஷியா கோஸ்வாமி.  இவருக்கு வயது 8.  இவர் குழந்தை பருவத்திலிருந்தே…

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் ஆசிய அளவில் சாதனை படைத்து அசத்தியுள்ளார். 

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியை சேர்ந்தவர் அர்ஷியா கோஸ்வாமி.  இவருக்கு வயது 8.  இவர் குழந்தை பருவத்திலிருந்தே தனது தந்தையுடன் ஜிம்முக்கு சென்று வந்துள்ளார்.  இதனால் சிறுமி அர்ஷியாவுக்கு பளுதூக்குதலில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து,  பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் வென்று வந்துள்ளார்.

இந்த நிலையில்,  அவர் சமீபத்தில் 60 கிலோ எடை தூக்கும் போட்டியில் வென்று ஆசிய அளவில் சாதனை படைத்துள்ளார்.   இதனை இந்தியன் புக் ஆப் ரெகார்ட்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.  இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.