BLACKPINK ஜிசூ-வின் முதல் சோலோ ஆல்பம் வெளியானது – ரசிகர்களின் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!!!

பிரபல தென்கொரிய இசைக்குழு ’பிளாக்பிங்க்’-ன் உறுப்பினரும், தலைவியுமான ஜிசூ தனது சோலோ ஆல்பம் ‘ME’- ஐ வெளியிட்டுள்ளார். உலகளவில் பிரபலமான தென்கொரிய பாப் இசைக்குழுக்களில் ’பிளாக்பிங்க்’-கும் ஒன்று. ஜிசூ, ஜென்னி, ரோஸ், லிசா ஆகிய…

பிரபல தென்கொரிய இசைக்குழு ’பிளாக்பிங்க்’-ன் உறுப்பினரும், தலைவியுமான ஜிசூ தனது சோலோ ஆல்பம் ‘ME’- ஐ வெளியிட்டுள்ளார்.

உலகளவில் பிரபலமான தென்கொரிய பாப் இசைக்குழுக்களில் ’பிளாக்பிங்க்’-கும் ஒன்று. ஜிசூ, ஜென்னி, ரோஸ், லிசா ஆகிய 4 இளம்பெண்களின் அசத்தலான இசையால் கட்டமைக்கப்பட்ட ’பிளாக்பிங்க்’ உலகளவில் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளது. தனக்கென உள்ள ரசிகர் பட்டாளத்திற்கு ’பிளிங்க்ஸ்’ எனவும் பெயரிட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இசைக்குழுவாக அறிமுகமான ’பிளாக்பிங்க்’,  ஏராளமான இசை ஆல்பம்களையும், பாடல்களையும் கொடுத்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளனர். பிரபல இசைக்குழு BTS-க்கு இணையாக யூடியூபில் அதிக சந்தாதாரர்களை கொண்ட இசைக்குழு உள்ளிட்ட பல கின்னஸ் சாதனைகளை குவித்துள்ளது. தனது இசை வீடியோவிற்கு யூடியூபில் பில்லியன் கணக்கான பார்வைகளையும் பிளாக்பிங்க் பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள் : வெளியானது விடுதலை பாகம் 1; படம் எப்படி இருக்கு? – டிவிட்டர் விமர்சனம்

பிளாக்பிங்கின் உறுப்பினர் ஜென்னி கடந்த 2018 ஆம் ஆண்டு ’சோலோ’ என்ற தனது முதல் சோலோ பாடலை வெளியிட்டார். இப்பாடல் உலகளவில் பிரபலமானது. அவரைத் தொடர்ந்து ரோஸ் ‘R’ என்ற சோலோ ஆல்பத்தை கடந்த மார்ச் 2021ல் வெளியிட்டார். அதேபோல் லிசா, 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ’லாலிசா’ என்ற சோலோ பாடலை வெளியிட்டார்.

இப்படி பிளாக்பிங்க்கின் உறுப்பினர்களில் மூன்று பேர் தனது சோலோ ஆல்பம் மற்றும் பாடல்களை வெளியிட்ட நிலையில், மீதம் இருக்கும் ஜிசூ, எப்போது சோலோ ஆல்பம் வெளியிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அந்த காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது ஜிசூ தனது சோலோ ஆல்பமான ‘ME’ -ஐ வெளியிட்டுள்ளார்.

இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள ‘Flower’ என்ற பாடலின் மியூசிக் வீடியோ வெளியாகி யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. இப்பாடல் வெளியான 3 மணி நேரத்தில் 1.1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது.

  • ஜெனி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.