முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அரசு கல்லூரியில் தமிழ் கருத்தரங்கு!

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்
பெறும் வகையில் கல்லூரியில் தமிழ் கருத்தரங்கு நடைபெற்றது.

செந்தமிழ் சொற்பிறபியல் அகரமுதலி திட்டம் இயக்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்காக சொற் குவை மாணவ தூதுவர் பயிற்சி திட்ட கருத்தரங்கு கூட்டம் ஆர் கே நகர் அரசு கல்லூரியில் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழக அரசு சார்பாக நடத்தப்படும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள்
பயன்பெரும் வகையிலும் தமிழை பிழையின்றி பேசவும் கருத்துக்களை எளிதாக தெரிந்து
கொள்ளவும் மாணவ-மாணவிகள் இடையே தமிழ் குறித்து சொற்றொடர்களை எளிதில் தெரிந்து கொள்ள தமிழக அரசால் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஏற்பாடு செய்த இந்த
நிகழ்ச்சி வடசென்னை ஆர்கே நகர் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்தக் கல்லூரியில் இன்று தமிழ் வளர்ச்சி சார்பாக மாணவ தூதர் பயிற்சி கருத்தரங்கம்
இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குனர்
முனைவர் விஜயராகவன் கருத்தரங்கத்தை தொடங்க வைத்து சிறப்புரை ஆற்றினார்.

மாணவ-மாணவிகளுக்கு தமிழ் வார்த்தைகளை எடுத்துரைத்து தமிழின் அருமை பெருமைகளை எவ்வாறு உச்சரிப்பது போன்ற கருத்தரங்கில் அவர் உரையாற்றினார்.

இந்தக் கல்லூரியில் மட்டுமல்லாமல் தமிழகம் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும்
போய் சேர வேண்டும் என்பது அவரது கருத்து. இதில் அந்தக் கல்லூரி மாணவர்கள் மற்றும்
மாணவிகள் கலந்து கொண்டு இயக்குனர் முனைவர் விஜயராகவன் கேட்ட கேள்விகளுக்கு
மாணவர்கள் உற்சாகமாக பதில் அளித்து கருத்தரங்கத்தை சிறப்பித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சஞ்சீவி மலையில் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

EZHILARASAN D

‘வரதட்சணை வாங்க மாட்டோம்’… கேரளாவில் கல்லூரி மாணவர்களிடம் கையெழுத்து பெற முடிவு?

Gayathri Venkatesan

கொரோனா மரணங்களை அரசு வெளிப்படையாக அறிவிக்க சோனியா கோரிக்கை

G SaravanaKumar