நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் பாஜக மூத்த தலைவர் ஹெஜ்.ராஜா திருமயம் நீதிமன்றத்தில் ஆஜரானார்
கடந்த 2018ஆம் ஆண்டு திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்ல முயன்ற முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது உயர் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் அவதூறாக பேசியதாக ஹெச்.ராஜா உள்ளிட்ட 20 பேர் மீது திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கின் குற்றப்பத்திரிகை கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்த வழக்கில் ஹெச்.ராஜா இன்று ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜரானார். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 20 பேரில் ஹெச்.ராஜாவுடன் சேர்த்து 12 பேர் இன்று ஆஜராகி உள்ளனர்.