பாஜக என்பது காற்றடைத்த பலூன் என்றும் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில், கே.எஸ்.அழகிரி, கேக் வெட்டி தொண்டர்களுடன் புத்தாண்டை கொண்டாடினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராகுல் காந்தி இந்தியாவுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக தெரிவித்தார்.
பிரதமர் மோடி வேளாண் சட்டங்கள் கொண்டு வந்த நிலையில், மதுரை வந்த ராகுல் காந்தி, ஓராண்டில் மோடி வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவார் என கூறியதாகவும், தற்போது, அதன்படியே நடந்துள்ளதாகவும் தெரிவித்தார். மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், கலாச்சாரம் சீரழிந்துள்ளதாகவும் கூறிய அவர், இதனை சரி செய்யும் ஆற்றல் ராகுல் காந்தியிடம்தான் உள்ளது என்றும் அவர் கூறினார்.
https://twitter.com/KS_Alagiri/status/1476984072677191681
தமிழ்நாட்டிற்கு தற்போது விடியல் ஏற்பட்டுள்ளதாகவும், தவறு நடக்கும் இடத்திற்கு முதலமைச்சர் செல்வதாகவும், தவறானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். சொந்த கட்சிக்காரர்கள் கூட தவறு செய்தால் கண்டிக்கப்படுவதாக தெரிவித்த கே.எஸ்.அழகிரி, இதனை காங்கிரஸ் கட்சி வரவேற்பதாக கூறினார்.








