பாஜக என்றாலே 420 கட்சிதான் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பாஜக என்றாலே ஆடியோ – வீடியோ காட்சிதான். அதனால் தான் அந்த கட்சியில் இருப்பவர்களே 420 கட்சி என்று சொல்லி கட்சியிலிருந்து வெளியே செல்கிறார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார் சென்னை ராஜா…

பாஜக என்றாலே ஆடியோ – வீடியோ காட்சிதான். அதனால் தான் அந்த கட்சியில் இருப்பவர்களே 420 கட்சி என்று சொல்லி கட்சியிலிருந்து வெளியே செல்கிறார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள விழி காணும் நிழற்படம் வரலாற்றின் வழித்தடம் எனும் முதல்வரின் புகைப்பட கண்காட்சியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வரின் புகைப்பட கண்காட்சியை பார்க்கும் பொழுது பிரம்மிப்பாக இருந்தது. சிறப்பான கண்காட்சியை அமைச்சர் சேகர்பாபு அமைத்துள்ளார். மாணவர்கள், பள்ளி சிறுவர்கள் அனைவரும் கண்காட்சியை பார்த்து வருகிறார்கள் . தமிழக முதலமைச்சர் கருணாநிதியால் பாராட்டப்பட்டவர், உழைப்பு உழைப்பு உழைப்பு என்று எந்நேரமும் இருந்தவர். அதற்கு சான்று இந்த கண்காட்சி. எல்லா புகைப்படமும் எனக்கு பிடித்த புகைப்படம் தான். ஒவ்வொரு புகைப்படம் வரலாற்று சாதனை.

மிஷா வழக்கில் சிறை தண்டனைக்கு சென்றதை இங்கு காட்சிக்கு வைத்திருந்தார்கள். அது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், அடுத்தது நான் உள்ளே செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்று சிரித்துக் கொண்டே கேட்டார். மேலும், பேசிய அவர், நான் நிறைய முறை கைதாகி இருக்கிறேன். ஊழல் வழக்கு எதுவும் கிடையாது, போராட்டத்திற்காக தான் என்றார். முதலமைச்சரின் மிஷா கொடுமை, அதற்குப் பிறகு பிறந்தவன் தான் நான்… நான் பிறக்கும் பொழுது எனது தாத்தா சிறையில் இருந்தார். அந்த பதிவை எல்லாம் இங்கு வைத்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு நெகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

இதையும் படிக்க: தமிழில் குடமுழுக்கு நடத்த கருத்து கேட்பு கூட்டம்; இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு

தொடர்ந்து பேசிய அவர், வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளிவந்த செய்தி பொய் செய்தி. மீண்டும் மீண்டும் அதை பற்றி பேச வேண்டிய தேவை இல்லை. பாஜக என்றாலே ஆடியோ – வீடியோ காட்சிதான். அவர்கள் கட்சிக்குள் இருக்கக் கூடியவர்களை வீடியோ எடுத்து வைத்து கொண்டு மிரட்டக் கூடியவர்கள். அதனால் தான் தொடர்ந்து அவர்கள் கட்சியில் இருப்பவர்களே பாஜக தலைவரை ஒன்னாம் நம்பர் 420 என்று கூறி கட்சியில் இருந்து வெளியே செல்கிறார்கள் என்றார். பொய் செய்தி பரப்பினால் நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவுதான் செய்வார்கள் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.