10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாஜக அரசு – சாதனைகளை பட்டியலிட்டு பெருமிதம்!!

10-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் சாதனைகளை வெளியிட்டு பாஜக பெருமிதம் தெரிவித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மே 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான…

10-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் சாதனைகளை வெளியிட்டு பாஜக பெருமிதம் தெரிவித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மே 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. 30 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்கு பின், தனிப்பெரும்பான்மையுடன் பாஜக அரசு அமைந்ததால், மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது.

கடந்த 2016-ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை துணிச்சலுடன் கையாண்டது, கொரோனா நோய் தொற்றின்போது 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை, குறுகிய காலத்தில் செலுத்தி, மக்களை பாதுகாத்தது உள்ளிட்டவை உலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள் : ”உள்ளம் சேர்ந்தா எல்லாம் மாறும்…” – வெளியானது மாமன்னன் படத்தின் ’ஜிகு ஜிகு ரயில்’ பாடல்!

இதுதவிர 42 கோடி புதிய வங்கி கணக்குகள், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தியுள்ளது. இந்நிலையில் 9 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட 9 சாதனைகளை பாஜக பட்டியலிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.