நாகாலாந்து சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
நாகாலாந்து சட்டமன்றம் மொத்தம் 60 தொகுதிகளை கொண்டது. இந்த 60 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் கூட்டணி வைத்து பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் என்பிஎப் 26 தொகுதிகளிலும் என்டிபிபி 18 தொகுதிகளிலும் பாஜக 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தற்போது நாகாலாந்து மாநிலத்தில் என்டிபிபி தலைமையில் பாஜகவை உள்ளடக்கிய கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த தேர்தலில் 20 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்டது. இதில் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது வரவிருக்கிற சட்டமன்ற தேர்தலுக்கு 20 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை பாஜக தற்போது வெளியிட்டுள்ளது. பாஜக நாகாலாந்து மாநில தலைவராக தெம்ஜென் இம்னா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அலோங்டாகி தொகுதியில் களமிறங்குகிறார்.
மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநில தேர்தல் தொடர்பாக தேசிய தலைவர் நட்டா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.