பறவை காய்ச்சல் எதிரொலி : தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதியில் மருத்துவ கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலம், ஆலப்புழை பகுதியில் உள்ள பண்ணைகளில் வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வந்தன.  இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில்,  அங்குள்ள…

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதியில் மருத்துவ கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், ஆலப்புழை பகுதியில் உள்ள பண்ணைகளில் வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வந்தன.  இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில்,  அங்குள்ள பறவைகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது.  கடந்த சில நாள்களில் மட்டும் ஆயிரக்கணக்கான வாத்துகள் மற்றும் கோழிகள் தொற்றுக்குள்ளாகி இறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டிலும் அந்தப் பறவைக் காய்ச்சல் (ஹெச் 5 என் 1 ) பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.  இதனைத் தொடர்ந்து,  கேரளத்தையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.  இது தொடா்பாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

“பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்ட்ட கோழிகள் மற்றும் பிற பறவைகளிடம் இருந்து மனிதா்களுக்கும் தொற்று பரவ வாய்ப்புள்ளது.  குறிப்பாக, அதன் கழிவுகளில் இருந்து மனிதா்களுக்கு எளிதில் பரவக்கூடும்.  காய்ச்சல், தலைவலி, தசைப் பிடிப்பு, இருமல், மூச்சு திணறல் போன்றவை பறவை காய்ச்சலுக்கான அறிகுறிகளாக உள்ளன.  கால்நடை துறையுடன் இணைந்து பறவை காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்.

அதன்படி, கேரளத்தை ஒட்டியுள்ள தமிழ்நாட்டின் கோவை, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  இந்த வகை தொற்றால் பாதிக்கப்படும் பறவைகள் குறித்தும், அதன் வாயிலாக மனிதா்களுக்கு காய்ச்சல் பரவினால், அது குறித்தும் பொது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.”

இவ்வாறு அவா்கள் தெரிவித்தனா்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.