முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு நூலான உங்களில் ஒருவன், வரும் 28ஆம் தேதி வெளியாகின்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறானது, உங்களில் ஒருவன் – பாகம் 1 என்ற பெயரில் நூலாக தயாராகி உள்ளது. இதன் வெளியீட்டு விழா வரும் 28ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் விழாவில், அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு முன்னிலை வகிக்கிறார். திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி வரவேற்புரை ஆற்றுகிறார். நிகழ்வில் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ராகுல்காந்தி பங்கேற்று நூலை வெளியிடுகிறார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வீ, கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். இதற்கிடையே உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க முன்னாள் முதலமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கும் திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனது 23 வரையிலான வாழ்க்கைதான் இந்த புத்தகம் 1953 மார்ச் 1 அன்று பிறந்தேன் 1976 பிப்ரவரி 1 அன்று மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன் இதற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் நடந்த வரலாற்று சுவடுகளை உங்களில் ஒருவன் முதல் பாகமாக எழுதி இருக்கிறேன் என அழைப்பிதழில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். பூம்புகார் பதிப்பகம் உங்களில் ஒருவன் நூலை வெளியிடுகின்றது