பிகாரில் உதவி பேராசிரியர் ஒருவர் தனது 33 மாத சம்பளத் தொகையான ரூ.24 லட்சத்தை பல்கலைக்கழகத்திடமே திருப்பிக் கொடுக்க முன்வந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகாரைச் சேர்ந்த லாலன் குமார் என்ற இளைஞர், படித்து முடித்ததும் பிகாரின் முசாபர்பூரில் உள்ள நிதிஷேஷ்வர் கல்லூரியில் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிந்தி உதவி பேராசிரியராக பணிக்கு சேர்ந்துள்ளார். மாணவர்கள் யாரும் கல்லூரிக்கு வராமல் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த லாலன் குமார், கொரோனா பெருந்தொற்று குறைந்ததும் மாணவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எனினும், கடந்த 33 மாதங்களாக மாணவர்கள் வராததால், அதுவரை தான் சம்பளமாகப் பெற்ற ரூ.23,82,228-ஐ திருப்பித் தர முடிவெடுத்து அந்த தொகைக்கான காசோலையை தனது கல்லூரி இணைந்துள்ள அம்பேத்கர் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கச் சென்றுள்ளார்.
எனினும், காசோலையை ஏற்க பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லாலன் குமார், பாடம் நடத்தாமல் சம்பளம் பெருவதை மனசாட்சி ஏற்காததன் காரணமாக பணத்தை திருப்பித் தர முடிவெடுத்ததாக தெரிவித்துள்ளார்.
பாடம் நடத்தாமல் சம்பளம் பெருவது கல்வியை கொலை செய்வதற்குச் சமம் என தெரிவித்துள்ள லாலன் குமார், இதுபோன்ற நிலையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஏராளமான ஆசிரியர்கள் பாடம் எடுக்காமலேயே சம்பளம் பெற்று வந்த நிலையில், லாலன் குமாரின் செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.