பழம்பெரும் டாய்லெட்களை சேகரிக்கும் சமூக ஆர்வலர்!

பழமையான பொருட்கள் தொடங்கி தனிச்சிறப்பு மிக்க பொருட்களை சேகரித்து அருங்காட்சியகமாக மாற்றும் பாணியானது தற்போது கழிவறை பக்கமும் திரும்பியுள்ளது. பிகாரை சேர்ந்த பிந்தேஷ்வர் பத்தாக் எனும் சமூக ஆர்வலர் ஒருவர் சுமார் 3000 ஆயிரம்…

பழமையான பொருட்கள் தொடங்கி தனிச்சிறப்பு மிக்க பொருட்களை சேகரித்து அருங்காட்சியகமாக மாற்றும் பாணியானது தற்போது கழிவறை பக்கமும் திரும்பியுள்ளது.

பிகாரை சேர்ந்த பிந்தேஷ்வர் பத்தாக் எனும் சமூக ஆர்வலர் ஒருவர் சுமார் 3000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கழிவறைகள் தொடங்கி தற்போதைய கழிவறை வரை சேகரித்து அருங்காட்சியகம் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது பிந்தேஷ்வரின் சேகரிப்பில் உள்ள கழிவறைகள் அரசர்களின் சிறப்பு மிக்க சிம்மாசன பாணியிலான கழிவறைகளும், சாதாரண மனிதர்கள் பயன்படுத்திய கழிவறைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து குறிப்பிடுகையில், இவற்றினை வெறுமென சேகரிப்புகள் என கடந்து விட முடியாது. இது மனித சமூகத்தின் படிமம் என பிந்தேஷ்வர் பெருமைகொள்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.