வன்முறை வழக்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் கைது – யார் தெரியுமா?

தெலுங்கில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் வெற்றியாளர் பல்லவி பிரஷாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் பிக்பாஸ் போட்டிகள்  பல்வேறு மொழிகளில் நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் போட்டிகள் ரசிகர்களிடம் பலவிதமான விமர்சனங்களை பெற்று…

தெலுங்கில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் வெற்றியாளர் பல்லவி பிரஷாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பிக்பாஸ் போட்டிகள்  பல்வேறு மொழிகளில் நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் போட்டிகள் ரசிகர்களிடம் பலவிதமான விமர்சனங்களை பெற்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தமிழில் நடிகர் கமல்ஹாசன், மலையாளத்தில் நடிகர் மோகன் லால் மற்றும் தெலுங்கில் நடிகர் நாக சைதன்யா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

அண்மையில், தெலுங்கில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பு பெற்றுள்ளது. இந்த போட்டியில் யூடியூபர் பல்லவி பிரசாந்த் வெற்றி பெற்றுள்ளார். அமர்தீப் என்பர் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

இதையும் படியுங்கள் : கல்லூரி விரிவுரையாளர் அமைச்சரான கதை! யார் இந்த பொன்முடி?

அதனை தொடர்ந்து, நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்த பின் பல்லவி பிரஷாந்த் ரசிகர்கள்  ஒன்று கூடி தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அப்போது, ரசிகர்கள் அங்கியிருந்த வாகனங்களையும், பேருந்துகளையும் தாக்கி சேதப்படுத்தினர். இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் இன்று போலீசார் பல்லவி பிரஷாந்தை கைது செய்தனர்.

https://twitter.com/SriKanthY_/status/1737488513124233728?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1737488513124233728%7Ctwgr%5E643177c913c7c2fe1960da94f9e0ee8ee523b075%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fpolice-arrest-bigg-boss-7-winner-pallavi-prashanth-1703087577

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.