இந்தியா-சீனா பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டதைத் தொடர்ந்து லாடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து இரு நாட்டு வீரர்களும் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக பாதுகாப்புகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

லடாக்கின் சர்ச்சைக்குரிய பகுதியில் ஏற்பட்டு வந்த பதற்றம் தற்போது இரு நாட்டு ராணுவ தலைமை மற்றும் ராஜதந்திர ரீதியலான பேச்சு வார்த்தை மூலமாக சமரசம் எட்டப்பட்டிருப்பதாக ராஜ்நாத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட இருநாட்டு வீரர்களிடையேயான மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனைத் தொடர்ந்து இரு நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகளும், ராஜதந்திர அளவிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாகவும், அதன் தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய பகுதியான பாங்காங் சோ ஏரியிலிருந்து, இரு நாட்டு ராணுவ வீரர்களும் விலக்கிக்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்ச்சைக்குரிய பகுதியிலிருந்து நாம் எதையும் இழக்கவில்லை என்றும், சீனாவின் நியாயமற்ற உரிமைகோரலை ஏற்க முடியாது, இந்தியா தனது எல்லையிலிருந்து ஒரு அங்குலம் நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்காது என இந்த அவைக்கு உறுதியளிப்பதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.