இந்தோனேசியாவில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகில் இயற்கை பேரிடர்கள் அதிகம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக இந்தோனேசியா இருந்து வருகிறது. அந்நாட்டின் சுலவேசி தீவில் இன்று காலை திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. ஏராளமான மக்கள் வீதிகளில் திரண்டனர். இந்த நிலநடுக்கத்தில் அங்கிருந்த மருத்துவமனை ஒன்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் நோயாளிகள் மருத்துவர்கள் என பலரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
இது தொடர்பாக தகவலறிந்து வந்த மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.







