கொல்லங்கோடு ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயிலில் மீனபரணி தூக்கத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றான கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மீனபரணி தூக்கத்திருவிழா பத்துநாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதையடுத்து இந்த ஆண்டுக்கான திருவிழா துவங்கியது. பின்னா், சிறப்பு வாய்ந்த பச்சிளம் குழந்தைகளுக்கானத் தூக்க நேர்ச்சை தேரோட்டம் வரும் 25 ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ள நிலையில், முன்னதாக கொல்லங்கோடு பத்ரகாளியம்மனின் தாய்கோயிலான கண்னாகம் கோயிலிலிருந்து பெண்குழந்தைகளின் தாலப்பொலி, தாய்மார்களின் முத்துக்கொடை ஆகியவை மேளதாளங்களுடன் ஊர்வலமாக , அம்மனின் திருமுடிகள் பறம்பு ஆலயத்திற்கு கொண்டுவரபட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து ஆலய தந்திரி தெற்கேடத்துமனை ஈஸ்வரன் தலைமையில் திருக்கொடியேற்றப்பட்டு தூக்கதிருவிழா துவங்கியது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளாவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் .