ஜவான் திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஜூலை 10ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழில் நடிகர் விஜய்யை வைத்து தெறி , மெர்சல், பிகில் என மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, தற்போது பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் உடன் இணைந்து ஜவான் என்ற படத்தினை இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட் திரைத்துறையில் இயக்குநர் அட்லி அறிமுகமாகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்போது, இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. செப்.7 ஆம் தேதி ஜவான் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இதன் ஓடிடி விற்பனை , இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதன் காரணமாக, இந்தாண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் இசை உரிமத்தை டீ – சீரியஸ் நிறுவனம் ரூ.36 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஜவான் திரைப்படம் டிரெய்லர் வெளியாவதற்கு முன்பாகவே, தியேட்டர் வெளியீடு அல்லாத உரிமம் 250 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஜவான் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் படத்தின் முன்னோட்ட விடியோ ஜூலை 10ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இத்தானில் அவரும் ஜவான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்பட்டு வந்த செய்திகள் தற்போது உறுதியாகியுள்ளது.
Let the countdown for the #JawanPrevue begin! 💥#JawanPrevueOn10July#Jawan releasing worldwide on 7th September 2023, in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/Z8Ungg8MBJ
— VijaySethupathi (@VijaySethuOffl) July 8, 2023
- பி.ஜேம்ஸ் லிசா