இளஞ்சிவப்பு பூக்கள் நிறைந்த தோட்டமாக மாறி பூத்துக் குலுங்கும் பெங்களூரு – வைரலாகும் புகைப்படங்கள்

பெங்களூரில் உள்ள ட்ரம்பெட் மரங்களில் (Tabebuia Avellaneda) அழகிய இளஞ்சிவப்பு பூக்கள் பூத்துக் குலுங்கும் புகைப்படங்கள் இணையத்தை தற்போது கலக்கி வருகிறது.   பெங்களூரு நகரம் இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்தே பல இளஞ்சிவப்பு பூக்கள்…

பெங்களூரில் உள்ள ட்ரம்பெட் மரங்களில் (Tabebuia Avellaneda) அழகிய இளஞ்சிவப்பு பூக்கள் பூத்துக் குலுங்கும் புகைப்படங்கள் இணையத்தை தற்போது கலக்கி வருகிறது.

 

பெங்களூரு நகரம் இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்தே பல இளஞ்சிவப்பு பூக்கள் பூக்கும் ட்ரம்பெட் மரங்களின் அழகிய தோற்றத்துடன் பூத்துக் குலுங்கி வருகிறது. பொதுவாக இந்த மரங்கள் மார்ச் மாத இறுதியில் இருந்துதான் பூக்க துவங்கி மே துவக்கம் வரை நீடிக்கும். ஆனால் இந்த முறை, வறண்ட காலநிலை காரணமாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இருந்தே பூக்க துவங்கி அவ்வப்போது இணையவாசிகளும் அழகிய ட்ரம்பெட் மரங்களின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர். தற்போது மார்ச் இறுதி நெருங்கிவிட்ட நிலையில், இந்த மரங்களின் அழகு மேலும் மெருகேறி பெங்களூரு நகரையே இளஞ்சிவப்பு பூக்கள் நிறைந்த அழகி இயற்கை தோட்டமாக மாற்றியுள்ளது.

பிங்க் ட்ரம்பெட்கள், டபேபுயா ரோசியா அல்லது பிங்க் பூயி என்று அழைக்கப்படும் இந்த மரங்கள், ஒரு வகை நியோட்ரோபிகல் மரமாகும். இது துவக்கத்தில் தெற்கு மெக்சிகோவில் தான் கண்டறியப்பட்டது . அங்கு இந்த மரங்கள் பொதுவாக வறண்ட காலநிலையில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பூக்கும். இருப்பினும் சிலநேரம் இந்த மரங்கள் ஆகஸ்ட், செப்டம்பர், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கூட பூக்குமாம். அந்த வகையில் இந்த மரம் வளர்வதற்கான சீதோஷநிலை பெங்களூருவில் நிலவுவதால் ஆண்டுதோறும் காதல் இதயத்தின் அடையாளமான இளஞ்சிவப்பு பூக்களுடன், மனதினில் அமைதியையும், கண்ணுக்கு குளிர்ச்சியையும் கொடுக்கும் விதமாக பூத்துக் குலுங்கி வருகிறது.

மேலும் நகரவாசிகளும், அந்த அழகிய தோற்றத்தினை தினம் தினம் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருவதோடு, தங்கள் கருத்துக்களை பதிவிட்டும் வருகின்றனர். பெங்களூரு வாசிகளால் இணையத்தில் பகிரப்பட்ட அழகான இளஞ்சிவப்பு பூக்களின் புகைப்படங்கள் இங்கே உள்ளன.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.