ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி, பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை சேர்த்தது. எளிய இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி வீரர்கள், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் லக்னோ அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றியை கைப்பற்றியது.







