நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பெங்களூரு விமானம் அரசமாகத் தரையிறக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பெங்களூரில் இருந்து பாட்னாவுக்கு, கோ பர்ஸ்ட் என்ற விமானம் 139 விமானப் பயணிகளுடன் இன்று காலை சென்று கொண்டிருந்தது. நாக்பூர் அருகே நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, விமான என்ஜினில் கோளாறு ஏற்பட்டதற்கான எச்சரிக்கையை, விமானி பார்த்தார். இதனால் அந்த என்ஜினை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு விமானி தள்ளப்பட்டார்.

உடனடியாக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறங்க வேண்டும் என்று அனுமதி கேட்டார். அனுமதி கொடுக்கப்பட்டதை அடுத்து அந்த விமானம் நாக்பூர் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
’உடனடியாக விமான நிலையத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தோம். ஓடுபாதைகள், தீயணைப்பு வாகனங்கள், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக விமானம் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.’ என்றார் நாக்பூர் விமான நிலைய இயக்குநர் அபிட் ருஹி.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement: