நியூசிலாந்து வீரரை எல்பிடபிள்யூ முறையில் அஸ்வின் அவுட்டாக்கியும் அம்பயர் அவுட் கொடுக்காததால், அஸ்வின் அப்செட் ஆனார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி, அடுத்து டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சதமடித்து அசத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 5 விக்கெட்டுகளையும் ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும் அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டாம் லாதமும் வில் யங்கும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . இவர்களைப் பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் கடுமையாகப் போராடினர்.
லாதத்துக்கு மூன்று முறை எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுத்தும் அவர் மூன்றாம் நடுவருக்கு சென்றார். அதில் அவர் அவுட் இல்லை என்று தெரியவந்தது. இந்நிலையில் 73 வது ஓவரில் அஸ்வின் வீசிய பந்தில் லாதம் எல்பிடபிள்யூ ஆனார். அஸ்வின், ரஹானே உள்ளிட்டவர்கள் அவரிடம் அவர் கேட்டனர். நடுவர் நிதின் மேனன் கொடுக்கவில்லை. வழக்கமாக, மூன்றாம் நடுவருக்கு செல்லும் இந்திய அணி, இதற்கு செல்லவில்லை. ஆனால், டிவி ரீப்ளேவில் அது அவுட் என தெரிந்தது. இதனால், அஸ்வின் அப்செட் ஆனார். அப்போது லாதம் 66 ரன்களில் இருந்தார்.
Latham out LBW at 66, given not out, review not taken by India.
Are the matches going to get decided on the basis of a team’s judgment to take (or not to) DRS? pic.twitter.com/WzDoWrTQri— Bhupesh Juneja (@BhupeshJuneja1) November 27, 2021
பின்னர் தொடர்ந்து ஆடிய அவர் 95 ரன்னில் அக்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வில் யங் அஸ்வின் பந்தில் 89 ரன்களிலும், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் கனே வில்லியம்சன் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ராஸ் டெய்லர் 11 ரன்களிலும் நிக்கோலஸ் 2, ரச்சின் ரவீந்திரா 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 120 ஓவர் வரை நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
அக்ஷர் படேல் 3 விக்கெட்டுகளும் அஸ்வின், ஜடேஜா, உமேஷ் தலா ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர்.