முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

பெங்களூரு: பள்ளிகளில் மாணவர்களின் பையில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள் கண்டெடுப்பு

பெங்களூரு பள்ளி மாணவர்களின் பைகளில் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள் மற்றும் சிகரெட்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: பள்ளிக்கு மாணவர்கள் பள்ளிகலுக்கு செல்போன் கொண்டு வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் 8 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பைகளை சோதனை செய்யத் தொடங்கியது. கேஎம்எஸ் (கர்நாடகாவில் பள்ளிகளின் அசோசியேட்டட் மேனேஜ்மென்ட்) பொதுச் செயலாளர் டி சஷி குமார் கிட்டத்தட்ட 80% பள்ளிகளை ஆய்வு செய்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சோதனையின் போது, ​​பையிலிருந்து ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள்,  சிகரெட்டுகள், லைட்டர்கள் மற்றும் பிற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மாணவி ஒருவரின் பையில் மது நிரப்பப்பட்ட தண்ணீர் பாட்டில் மற்றும் கருத்தடை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், 10ம் வகுப்பு படிக்கும் சிறுமியின் நோட்டு புத்தகத்தில் ஆணுறை காணப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் இதுகுறித்து கேட்டபோது, ​​தனியார் டியூஷனில் படிக்கும் சக மாணவிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார். குழந்தைகளின் நடத்தையில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களால் பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இதன் பிறகு சில பள்ளிகள், பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களைக் கூட்டி, தங்கள் குழந்தைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முதலில் அமலாக்கத்துறையில் இருந்து டிடிவி தினகரன் தன்னை காத்து கொள்ளட்டும் – எடப்பாடி பழனிசாமி பதிலடி

Dinesh A

“வணிகர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கே ஆதரவு” – விக்கிரமராஜா

Niruban Chakkaaravarthi

சரியாக படிக்காததால் கண்டித்த தந்தை; தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மகள்!

Jayapriya