கோத்தகிரியில் நள்ளிரவில் கரடிகள் தனது குட்டிகளுடன் உலா வருவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி, இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வருவது தொடர்கதையாக உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படியுங்கள் : தந்தையை இயக்கும் மகன்! – மகிழ்ச்சியின் உச்சத்தில் மனோஜ் பாரதிராஜா
இந்நிலையில் கோத்தகிரியில் இருந்து பன்னீர் செல்லும் சாலையில், நள்ளிரவில் குட்டியுகளுடன் கரடி உலா வந்தது. இதனை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். வாகனத்தைக் கண்டதும் கரடி, தனது இரு குட்டிகளுடன் அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்றுள்ளது.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார குடியிருப்புப் பகுதிகள், தேயிலை தோட்டங்களுக்கு அருகே நாளுக்கு நாள் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், வனத்துறையினர் குடியிருப்புகள் பகுதிகள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் கரடிகளைக் கண்காணித்து, அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– சௌம்யா.மோ