பேட்டிங்கா? பவுலிங்கா? என்ன சொல்றது? -டாஸ் வென்ற பிறகு முடிவெடுப்பதை மறந்த கேப்டன் ரோஹித் சர்மா

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற பிறகு முடிவெடுப்பதை மறந்த கேப்டன் ரோஹித் சர்மாவின் சுவாரசிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  இந்தியா சுற்றுப்பயணமாக வந்துள்ள நியூசிலாந்து அணி…

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற பிறகு முடிவெடுப்பதை மறந்த கேப்டன் ரோஹித் சர்மாவின் சுவாரசிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்தியா சுற்றுப்பயணமாக வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொடண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் ஒருநாள் போட்டி கடந்த ஜனவரி 18 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில்  நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று  ராய்ப்பூரில் 2வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகலும்  காட்டி வருகிறது. இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் வென்ற பிறகு முடிவெடுப்பதை மறந்த கேப்டன் ரோஹித் சர்மா யோசித்த படி நின்ற காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

https://twitter.com/CricCrazyJohns/status/1616702852147351553?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1616702852147351553%7Ctwgr%5E41fc283c2dd1a562c2fe1f9e4b841b08b85880ca%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.abplive.com%2Fsports%2Fcricket%2Frohit-sharma-hilariously-forgets-what-to-do-after-winning-toss-in-india-vs-new-zealand-s-2nd-odi-97493

பேட்டிங்கா? பவுலிங்கா? என  ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில்  ”அது வந்து… நாங்கள் என்ன செய்ய உள்ளோம்… அதாவது நாங்கள்…  ” என்று அவர் யோசித்துக்கொண்டே தலையைச் சொரியும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.