பேட்மிட்டன் நட்சத்திரங்களான சாய்னா நேவால் , கோபிசந்த் , பாருபள்ளி காஷ்யப் ஆகியோரை சந்தித்த ஆப்பிள் சிஇஓ டிம் குக் சந்தித்துள்ளார்.
உலகளவில் 500க்கும் மேற்பட்ட நகரங்களில் தனது ஸ்டோர்களை நிறுவி வெற்றிகரமாக இயங்கி வரும் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் நேரடி விற்பனையகத்தை நிறுவாமல் இருந்தது. இந்நிலையில், இந்தியாவுடனான 25 ஆண்டு வர்த்தகத்தை கொண்டாடும் வகையில், மும்பை மற்றும் டெல்லியில் ஆப்பிள் ஸ்டோரை நிறுவுவதற்கான நடவடிக்கையில், அந்நிறுவனம் நீண்ட நாட்களாக ஈடுபட்டிருந்தது.
அதற்கான பணிகள் அண்மையில் சமீபத்தில் நிறைவு பெற்றன. இதனைத் தொடர்ந்து, மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர் நேற்று திறக்கப்பட்டது. இந்த ஸ்டோரை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் திறந்து வைத்தார்.
முன்னதாக வாடிக்கையாளர்கள் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களை டிம் குக் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பையை தொடர்ந்து டெல்லியிலும் ஆப்பிள் நிறுவனத்தின் நேரடி விற்பனை நிலையம் இன்று நடபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ இன்று பேட்மிண்டன் வீரர்களை சந்தித்து பேசினார்.
மும்பையில் உள்ள பேட்மிண்டன் மைதானத்திற்கு சென்ற அவர், பேட்மிண்டன் நட்சத்திரங்களான சாய்னா நேவால், கோபிசந்த், பாருபள்ளி காஷ்யப் ஆகியோரை சந்தித்து, அவர்களுடன் இணைந்து பேட்மிண்டன் விளையாடினார். பின்னர் அவர்களுடன் கலந்துரையாடி டிம் குக், ஆப்பிள் வாட்ச் எவ்வாறு உதவுகிறது என்பதை வீரர்களிடம் கேட்டறிந்தார்.







