பரந்தூர் விமான நிலையத்தில், தலைமுறை தலைமுறையாக வாழ்பவர்களின் எதிர்ப்பு, உணர்வு நியாயமானது எனக் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையம் நில கையெடுப்பு தொடர்பாகச் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமைச்செயலகத்திலிருந்து செய்தி 7 தமிழுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தலைமுறை தலைமுறையாக வாழ்பவர்களின் எதிர்ப்பு, உணர்வு நியாயமானது. வளர்ச்சிக்கான திட்டங்களை வரவேற்க வேண்டும் அதேசமயம் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்கள் விளைநிலங்களுக்கு செண்டிற்கு ரூ. 3 லட்சமும், குடியிருப்புகளுக்கு செண்டிற்கு ரூ.10 இலட்சமும் கேட்கிறார்கள். இரண்டாம், மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனவும், பெரிய குடியிருப்புப் பகுதிகளை அகற்றாமல் விமான நிலைய திட்டத்தில் ரன்வேயை தள்ளிப்போடலாம் எனக் கூறினார்.
அண்மைச் செய்தி: ‘இந்தியப் பங்குச் சந்தை; மீண்டும் 60,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்’
மேலும், மக்களுடைய அச்சம் நியாயமானது, அவர்கள் மனம் புண்படாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த அவர், வளர்ச்சித்திட்டங்கள் மக்களை வேதனைப்படுத்தாத வளர்ச்சியாக இருக்க வேண்டும். 2009-ல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் தீட்டப்பட்ட திட்டம், காலதாமதமில்லாமல் நிறைவேற்ற வேண்டும். காலம் காலமாக இருக்கும் மண்ணின் பூர்வ குடிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது. மக்கள் உளவியலாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனக் கூறினார்.








