மாணவர்களின் கவனச் சிதறலை தடுக்கும் வகையில், நெதர்லாந்தில் வகுப்பறைகளில் மொபைல் போன்களை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களின் கவனச் சிதறல்களைக் குறைக்க செல்பேசிகள், மடிக்கணனிகள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்ககளைப் பயன்படுத்துதை நெதர்லாந்து அரசாங்கம் தடை செய்துள்ளது. இந்தத் தடை உத்தரவு ஜனவரி 1, 2024 முதல் அமலுக்கு வரும் என்று நெதர்லாந்தின் கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.
ஜிட்டல் திறன்கள் குறித்த பாடங்களுக்கு விதிவிலக்குகள் செய்யப்படும். குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு அல்லது பிற மருத்துவ நிலைமைகள் இருந்தால் இந்த சாதனங்கள் தேவைப்படும் போது பயன்பாட்டுக்கு விதிவிலக்களிக்கப்படும்.
இது தொடர்பாக நெதர்லாந்து கல்வி அமைச்சர் ராபர்ட் டிஜ்க்ராஃப் அறிக்கையில் தெரிவிக்கையில்:-
மொபைல் போன்கள் நம் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருந்தாலும் அவை வகுப்பறையில் பயன்படுத்த கூடாது. மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் நன்றாக படிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறோம். மொபைல் போன்கள் ஒரு இடையூறாக அமைவதாக அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதில் இருந்து மாணவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். பள்ளிகள் கட்டாயம் இந்த தடையை அமல்படுத்த வேண்டும். 2024 ஜனவரியில் இருந்து அமலுக்கு வரும் இந்த அறிவிப்பை அமல்படுத்தாவிட்டால் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என அவர் எச்சரித்தார்.
பி.ஜேம்ஸ் லிசா







