Skip to content
January 19, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » bank employee arrested cheating womanbank account police scams
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.15.75 லட்சத்தை அபகரித்து வட்டிக்குவிட்ட வங்கி ஊழியர் கைது!

வங்கியில் வாடிக்கையாளர் டெபாசிட் செய்த ரூ.15 லட்சத்தை நூதன முறையில் திருடிய வட்டிக்கு விட்ட வங்கி ஊழியர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.  புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பிரகார வீதியை சேர்ந்தவர் மருதநாயகம் என்பவர்.…

Author Avatar

Web Editor

March 23, 202410:40 am arrestedbank accountBank EmployeecheatingPoliceScamswoman

வங்கியில் வாடிக்கையாளர் டெபாசிட் செய்த ரூ.15 லட்சத்தை நூதன முறையில் திருடிய வட்டிக்கு விட்ட வங்கி ஊழியர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். 

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பிரகார வீதியை சேர்ந்தவர் மருதநாயகம் என்பவர். இவர்
வெளிநாட்டில் வேலை பார்த்து காரைக்காலுக்கு திரும்பி வந்தபோது சம்பாதித்த ரூ.20 லட்சம் காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள HDFC வங்கியில் செலுத்தியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்ட மருதநாயகம் உயிரிழந்தார். அவரது பெயரில் இருந்த தொகையை அவரது மனைவியான ராஜராஜேஸ்வரி (57)வங்கிக் கணக்கிற்கு வங்கி ஊழியர் தட்சணாமூர்த்தி மாற்றி உள்ளார்.

இதையும் படியுங்கள் : நாட்டின் முதல் மறுபயன்பாட்டு ஏவுகணை ‘புஷ்பக்’ சோதனை வெற்றி!

இதையடுத்து, வங்கி ஊழியர் அந்த தொகையை ஒரு ஆண்டு வைப்பு நிதியாக வைப்பதாகவும் இலவசமாக காப்பீடு போட்டு தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி ராஜராஜேஸ்வரி ரூ. 20 லட்சத்தையும் டெபாசிட் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.15 லட்சம் வேறொரு வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டதாக
அவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இது குறித்து காரைக்கால் நகர காவல் நிலையத்தில் அவர் புகார் தெரிவித்தார்.

ராஜராஜேஸ்வரி  அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டனர்.  ராஜராஜேஸ்வரி வங்கிக் கணக்கில் இருந்து கடந்த 2023 ஆம் ஆண்டு
நவம்பர் மாதம் ரூ. 5 லட்சம், டிசம்பர் மாதம் ரூ. 2 லட்சம் மற்றும் அதே டிசம்பர்
மாதம் 6 தேதி  ரூ. 8 லட்சம் என அவரது வங்கியில் இருந்து CSB வங்கியில்
ராஜ்குமார் என்பவருக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது.

தனது வீட்டில் கீழ் தளத்தில் குடியிருந்து வரும் வங்கி ஊழியரான தட்சிணாமூர்த்தி மீது சந்தேகம் இருப்பதாகவும், அவர் தற்பொழுது தனது வீட்டின் தரைத்தளத்தில் CSB வங்கியில் பணிபுரிவதாகவும் போலீசாரிடம் ராஜராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தட்சிணாமூர்த்தியை விசாரித்த
போது சிஎஸ்பி வங்கியில் ராஜராஜேஸ்வரிக்கு ஒரு கணக்கை தட்சிணாமூர்த்தி தொடங்கியதும், அதற்கு ஆன்லைன் மூலம் ஆப்பை சரி செய்து வருவதாக கூறி மூன்று
முறை ராஜராஜேஸ்வரியிடம் செல்போனை வாங்கியதாகவும் தெரிவித்தார். அதன்பின் அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை தனது வங்கி கணக்குக்கு மாற்றியதாகவும் போலீசார் விசாரணையில் தெரிவித்தார்.

இதுமட்டுமல்லாது, தட்சிணாமூர்த்தி எச்டிஎஸ்பி வங்கியில் வேலை செய்த போது அதே ஊரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வங்கியில் கடன் கேட்டுள்ளார். இதற்கு வங்கியில் இருந்து பணம் அனுப்புவது போல ரூ. 15 லட்சத்தை இவர் அனுப்பி உள்ளார். இதற்கு ஒவ்வொரு மாதமும் ராஜ்குமார் தட்சிணாமூர்த்திக்கு வட்டி பணம் அனுப்பி உள்ளார். இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர்.  இந்த சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

திமுக ஆட்சியில் தொடர்கதையான அரசுப் பேருந்துகள் விபத்து – நயினார் நாகேந்திரன் விமர்சனம்…!

By Web Editor January 19, 2026

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் : யார் நலனிலும் திமுக அரசுக்கு அக்கறையில்லையா? – அன்புமணி ராமதாஸ்….!

By Web Editor January 19, 2026

சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் பாதிக்கப்படுவது பள்ளி மாணவர்களே – அண்ணாமலை..!

By Web Editor January 19, 2026

கரூர் வழக்கு : விஜயிடம் நடத்திய சிபிஐ விசாரணை நிறைவு….!

By Web Editor January 19, 2026
#ट्रेंडिंग हैशटैग:arrestedbank accountBank EmployeecheatingPoliceScamswoman

Post navigation

Previous Previous post: “பதவி விலகுங்கள் ஆர்.என்.ரவி” -செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!
Next Next post: ஆஸ்கர் விருதுகளை குவித்த ‘ஒப்பன்ஹெய்மர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியானது!
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading