கலவரபூமியான வங்கதேசம்! பிரதமர் ஷேக் ஹசீனா ராஜிநாமா! ராணுவ ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்!

  வங்கதேசத்தில் நடந்து வரும் தொடர் போராட்டத்தால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.  வங்காளதேசத்தில் சுதந்திர…

 

வங்கதேசத்தில் நடந்து வரும் தொடர் போராட்டத்தால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டால் ஏற்கனவே கலவரம் வெடித்த நிலையில் உச்சநீதிமன்றம் அந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து கலவரம் நின்றது.

இதற்கிடையில் நேற்று பிரதமர் சேக் ஹசீனா இடஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அழைத்ததால் மீண்டும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இருதரப்பினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  போராட்டக்காரர்கள் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என்று அறிவித்தனர்.

இந்த நிலையில், ஷேக் ஹசீனா தன்னுடைய பிரதமர் பதவியை ராஜிநாமா செய்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. அவர் ராணுவ ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.