தேர்தலில் ஓட்டு போடவில்லை எனில் எதிர்காலத்தில் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படும் என கம்போடியாவில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
உலகம் முழுவது உள்ள ஜனநாயக மற்றும் குடியரசு நாடுகளில் வாக்களிப்பது கட்டாயமக்கப்பட்டுள்ளது. தொழில், வேலைப் பளு, இடமாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பலர் தேர்தலை புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அனைவரும் தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் என்கிற அடிப்படையில் பல திட்டங்களை அரசுகள் முன்னெடுத்து வருகின்றன.
இந்தியாவில் தங்களுக்கு பிடிக்காத நபர்கள் தேர்தலில் போட்டியிட்டால் கூட தேர்தலை புறக்கணிக்காமல் நோட்டா எனப்படும் ( None Of The Above ) தேர்வை பயன்படுத்தி தேர்தலில் பங்கெடுக்க வலியுறுத்தி பல விழிப்புணர்வுகளை மத்திய மாநில அரசுகள் நடத்தி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முதியோர்களுக்கு வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கு Vote From Home முறையை அறிமுகப்படுத்தியது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் ஜூலை மாதம் 23-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடை பெற உள்ளது. இந்த நிலையில் அங்குள்ள மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் வாக்களிப்பதை கட்டாயமாக்கும் வகையில் சட்டத்திருத்ததை தற்போதைய அரசு கொண்டுவந்துள்ளது.
இந்த புதிய சட்டதிருத்தத்தின்படி வரும் தேர்தலில் வாக்களிக்க தவறியவர்களுக்கு எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிட முடியாது. அதேபோல பொதுமக்களை வாக்களிப்பதிலிருந்து தடுக்கும் அரசியல் கட்சியினருக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் இப்புதிய சட்டத் திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







