விருதுநகரில் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்ய தடை

பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலியாக விருதுநகர் மாவட்டத்தில் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்ய தடை விதித்து மாவட்ட கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, மதுரை, ராமநாதபுரம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து…

பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலியாக விருதுநகர் மாவட்டத்தில் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்ய தடை விதித்து மாவட்ட கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, மதுரை, ராமநாதபுரம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பு, பாஜக நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 2 தினங்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உடனே இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காவல்துறை சார்பில் இதுபோன்று சம்பவங்களில் ஈடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீட்டு சம்பவம் ஏதும் நடைபெறாமல் உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெட்ரோல் குண்டு வீசுவதை கட்டுப்படுத்தும் வகையில் விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் உள்ள பெட்ரோல் பங்குகளில் காவல்துறை சார்பாக அறிவிப்பு பலகை ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

அதில், கேன்களில் சில்லறை வியாபாரம் செய்யக்கூடாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவின் பேரில் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர் சார்பாக அறிவிப்பு பலகை என்பது ஒட்டப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.