இந்தியன் 2 படம்; களரி களத்தில் குதித்த காஜல் அகர்வால்

’இந்தியன் 2’ படப்பிடிப்பில் காஜல் அகர்வால் தனது பகுதிகளுக்காக களரிப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வரைலாகி வருகிறது.  கமல்ஹாசன் நடிப்பில் ’இந்தியன் 2’ படத்தை ஷங்கர் இயக்கி…

’இந்தியன் 2’ படப்பிடிப்பில் காஜல் அகர்வால் தனது பகுதிகளுக்காக களரிப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வரைலாகி வருகிறது. 

கமல்ஹாசன் நடிப்பில் ’இந்தியன் 2’ படத்தை ஷங்கர் இயக்கி வந்தார். லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பில், கிரேன் விபத்து, கொரோனா பரவல், பட்ஜெட் தொடர்பாக ஷங்கருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் பிரச்சினை எனப் பல காரணங்களால் படப்பிடிப்பு பலமுறை தள்ளிப்போடப்பட்டது.

இதனால் இயக்குநர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் அறிவிப்புகள் வெளியாயின. பின் ஒருவழியாக அனைத்து பிரச்சனைகளும் தற்போது சுமூகமாக முடிந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.சென்னை வடபழனி பிரசாத் லேபில் இந்தியன் 2 படத்திற்கான அரங்குகள் அமைக்கப்பட்டுப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.பின் சிறு இடைவேளைக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் கடந்த வாரம் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன் இணைவதோடு அவருடன் காஜல் அகர்வால் பங்கேற்கிறார். படத்தில் இடம்பெறவுள்ள பிளாஷ் பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதோடு மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகிவருகிறது. இந்த படப்பிடிப்பில் காஜல் அகர்வால் தனது பகுதிகளுக்காக களரிப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வரைலாகி வருகிறது.

மேலும் இயக்குநர் சங்கர் இந்தியன் 2 படப்பிடிப்பை விரைந்து முடித்து இன்னும் 10 நாட்களுக்குள் தனது மற்றொரு படமான ராம் சரண் நடிக்கும் RC15 படத்தில் இணையவுள்ளதாகக் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர்களுள் ஒருவரான பிரபல எழுத்தாளர் ஜெயமோகன், பேட்டி ஒன்றில் பேசுகையில் இந்தியன் 2 படம் மொத்தம் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் இருப்பதாகக் கூறினார். மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் இப்படத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.