சந்தன கடத்தல் வீரப்பன் தொடர்பாக திரைப்படமோ, வெப் சீரிஸோ எடுக்க தடை?

சந்தன கடத்தல் வீரப்பன் தொடர்பாக திரைப்படமோ, வெப் சீரிஸோ எடுத்தால், தன்னிடம் அனுமதி பெறுமாறு அவரது மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சந்தனக் கடத்தல் வீரப்பனின்…

சந்தன கடத்தல் வீரப்பன் தொடர்பாக திரைப்படமோ, வெப் சீரிஸோ எடுத்தால், தன்னிடம் அனுமதி பெறுமாறு அவரது மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, தமிழ்நாட்டில் இன்றளவில் பெரும்பாலான இளைஞர்கள் வீரப்பனை கதாநாயகனாக பார்ப்பதாகவும், அவரது புகழைக் கெடுக்கும் வகையில் திரைப்படங்கள், சமூக வலைதளங்களில் சிலர் வீரப்பனை தவறாக சித்தரித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

இனி வீரப்பனைப் பற்றி யார் திரைப்படம், குறும்படம் எடுப்பதாக இருந்தாலும் என்னிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றும், வீரப்பன் பெயரில் படம் எடுத்தாலே அது ஓடி விடும் என்று எண்ணுவதால், விளம்பரத்துக்காக அவரை தவறாக சித்தரித்து வெப் சீரிஸ் எடுத்து வரும் இயக்குநர் ஏ.எம்.ஆர். ரமேஷ் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் முத்துலட்சுமி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply