குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து நாளை அருவிகளில் குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏரளாமான சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சுற்றுலா பயணிகள் 5 பேர் சிக்கி கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். இதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டது. மேலும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். மேலும் 2 பேரை தேடும் பணி நடந்துவருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து கனமனைழ பெய்து வருவதால் குற்றால அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எனவே குற்றால அருவிகளான மெயின் அரவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் அதிகமான வெள்ளபெருக்கு ஏற்படுட்டுள்ளது. இதனால் நாளை அருவிகளில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை குற்றாலத்திற்கு வருகை தர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மெயின் அருவி பகுதியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அருவி பகுதியில் ஆய்வு நடத்தினார்.