பால சரவணின் பேச்சி #OTT ரிலீஸ் – படக்குழு அப்டேட்!

பாலசரவணின் நடிப்பில் வெளியான திரில்லர் திரைப்படமான பேச்சி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சியின் மூலம் சின்னத்திரையில் நடித்து ஓரளவுக்கு அறிமுகமானவர் பாலசரவணன். இதன் பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகினார். தற்போது…

Bala Saravan's Pachy #OTT Release - Crew Update!

பாலசரவணின் நடிப்பில் வெளியான திரில்லர் திரைப்படமான பேச்சி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியின் மூலம் சின்னத்திரையில் நடித்து ஓரளவுக்கு அறிமுகமானவர் பாலசரவணன். இதன் பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகினார். தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் பால சரவணன் அறியப்படுகிறார். சசிகுமார் நடிப்பில் வெளிவந்த குட்டிப்புலி படத்தின் மூலம் பால சரவணன் மக்களின் கவனத்தை பெற்றார்.

இதனைத்தொடர்ந்து அவர் நடித்த டார்லிங் மற்றும் திருடன் போலீஸ் ஆகிய திரைப்படத்தில் பால சரவணனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதேபோல இந்தாண்டு வெளியான அயலான், இங்க நான் தான் கிங்கு, ஹிட் லிஸ்ட் போன்ற வெற்றிப் படங்களில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தும் நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்த நிலையில் கடந்த மாதம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான பேச்சி எனும் திகில் நிறைந்த திரில்லர் படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் பால சரவணன் நடித்திருந்தார். இவருடன் காயத்ரி சங்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை ராமசந்திரன் இயக்கியுள்ளார்.


பேச்சி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான திரைப்படமாக அமைந்தது. திரைப்படத்தின் ஓடிடி குறித்து தற்பொழுது அப்டேட் வெளியாகியுள்ளது, திரைப்படம் நாளை முதல் ஆஹா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.