செப்.21-ல் #Brother டீசர் மற்றும் இசை வெளியீடு!

‘Brother’ திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா செப்.21 ம் தேதி நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட…

#Brother teaser and music release on Sep 21!

‘Brother’ திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா செப்.21 ம் தேதி நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிரதர்’. இப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், நடராஜன் சுப்பிரமணியம், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹாரிஸ் ஜெயராஜ், ஜெயம் ரவி திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். 

நகைச்சுவை மற்றும் குடும்ப பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கும் பிரதர் திரைப்படம் ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தோடு மோதும் என கூறப்பட்ட நிலையில், வரும் தீபாவளிக்கு (அக்.31) வெளியாக உள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு இறங்கியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா நாளை மறுநாள் நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.