#Tirupati Laddoo-வில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு கலப்பு உறுதி… ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

திருப்பதி கோயில் லட்டுக்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு ஆகியவை கலந்திருந்தது உண்மைதான் என தகவல் வெளியாகி உள்ளது. ஆந்தராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான்…

திருப்பதி கோயில் லட்டுக்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு ஆகியவை கலந்திருந்தது உண்மைதான் என தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்தராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தேசிய அளவில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதற்கு தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்தார். இதற்கு ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரான ஓய்.எஸ் ஷர்மிளா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எக்ஸ் தளத்தில் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று மாலை தெலுங்கு தேசம் கட்சி, லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை ஆய்வகத்துக்கு அனுப்பி, அங்கிருந்து கிடைக்க பெற்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனை தெலுங்கு தேசம் கட்சிப் பிரமுகர் வெங்கட்ராமனா ரெட்டி
செய்தி நிறுவனங்களுக்கு வெளியிட்டார். அதில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாமிச கொழுப்பு ஆகியவை கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பாமாயில் கலந்து இருப்பதும்
அதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.