‘பேட் கேர்ள்’ டிரெய்லர் : பிராமணர்களின் மனதை புண்படுத்துவதாக மனு!

‘பேட் கேர்ள்’ பட டிரெய்லர் கருத்துகள் பிராமணர்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கம் மனு அளித்துள்ளது.

இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பேட் கேர்ள்’. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோர் நடித்துள்ளனர்.

அமித் திரிவேதி இசையமைப்பில் வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து வழங்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. பதின்பருவத்தில் ஒரு பெண்ணின் உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த டிரெய்லர் பிராமணர்களின் மனதை புண்படுத்துவதாக இருப்பதாகவும், இப்படம் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு சர்ச்சைக்குரிய கருத்துகள் நீக்கப்பட்ட பின்னரே, படத்தை திரையிட வேண்டும் என
ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கம் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.